ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பிற மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும் என்பதால் மத்திய அரசு இது தொடர்பாக அடுத்தகட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஆளுநர் ரவியுடன் ஆலோசிக்க உள்ளது.

இந்நிலையில் இன்று ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்றுள்ள ஆளுநர் ரவி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply