இந்தியாவின் தொடர்புமொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன்’ – கமல்ஹாசனின் Thug பேச்சு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-3, மற்றும் கல்கி-2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி, ரஷ்யா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வெளிநாடு சென்று திரும்பிய கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது ”Thug Life படம் வருகிற ஜூன் 5-ந்தேதி வெளியாகும் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து தக் லைஃப் திரைப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தக் லைஃப் திரைப்படம் தொடர்பாக படக்குழு செய்தியாளர சந்திப்பை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி , அசோக் செல்வன் உள்ளிட்டவர்களும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் படத்தின் இயக்குநர் மணி ரத்னம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் ‘ உயிரே.. உறவே .. இதனை மட்டும் தமிழில் சொல்லிவிட்டு இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன். இது அரசியல் அல்ல மாறாக இதுதான் தமிழனின் எதார்த்தம். விருந்தோம்பல் என்பது தமிழர்களின் அடையாளம்” என பேசினார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *