சென்னை கலைஞர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
அதனை தொடர்ந்து தேர்தல் பிரசார பணிகள் குறித்தும், அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்க உள்ளார். கட்சி ரீதியாக பெரிய அளவில் உள்ள ஒன்றியங்களை பிரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புகள் உள்ளது.
அதேபோல், திமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பணிகள், கட்சியின் அடுத்த கட்ட பணிகள், உட்கட்சி பிரச்சினைகள் குறித்தும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முஹலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்கவுள்ளார். தேர்தல் நெருங்கி வருவதால் மாவட்ட செயலாளர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேச்சுகளைத் தவிர்க்க அறிவுரை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Leave a Reply