அது மிகுந்த திறமை கொண்டவராகவும் வெற்றியை தோல்வியிலிருந்து கற்றுக் கொள்பவராகவும் சவால்களை சாதனை ஆக்கும் பற்றாளர்களாகவும் முடியாது என்று சொல்லாமல் முடியும். என்னால் முடிச்சுகளை அவிக்கும் திறன்கொண்டும், எதிர்ப்புகள் எல்லா திசைகளிலும் வந்தாலும் இவையெல்லாமல் ஒன்றாக முடித்து காட்டும் வல்லமை கொண்டவனே.
சிறந்த தலைமை பண்பாளர்
அவனே மகுடம் சூடுவதற்கு உரித்தானவன்!
முன்னுரை என்று ஒன்று இருந்தால் கண்டிப்பாக முடிவுரை என்பது ஒன்று இருக்கும் ! அதை இறுதி வரை இயக்கி கொள்பவனே சிறந்த தலைமை பண்பாளர்!
தலைமை பொறுப்பை பற்றி ஒரு சிறு கதை ஒன்று கூற
விரும்பிகிறேன்
தெய்வானை என்ற சிறு வயது பெண் சரியான முறையில் திருமணம் ஆகாமல் இருந்தா பெண் மணிக்கு பத்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். அவனை தன் தந்தை இல்லை என்ற எண்ணம் வராமல் இருக்க அவனை தந்தைக்கு எடுத்துக்காட்டாக வளர்த்து வந்தாள்
தெய்வானை.
ராஜா என்ற தன் மகனை வாழ்க்கையே ஓர் போராட்டம் அதை போராட்டம் குணம் கொண்டவனாக இருப்பதற்கு அவனை ஓர் போராளியாக தலைமை பண்புக்கு எடுத்துக்காட்டாக வளர வேண்டும் என்ற ஆசை அவளிடம் இருந்தது. அதற்காக கராத்தே, மல்யுத்தம், கபடி போன்ற விளையாட்டிற்கு அழைத்து சென்று விளங்கினார். அவனுடைய ஆசிரியர் அவனை கண்டு வியப்பில் ஆழ்ந்தார். காரணம் எந்த ஒரு கருத்தைக் கூறி நடத்தினாலும் அதை குறுகிய நேரத்திற்குள் கற்று கொள்வான்.
இதை புரிந்த மன்னர் தன் மகனை ராஜா போல் வர வேண்டும் என்று நினைத்து ஆசிரியரிடம் வற்புறுத்தினார். ஆசிரியர் மறுப்பு கூறாமல் மன்னரின் மகனை விளையாட்டு கூடாரத்திற்குள் அழைத்து முதற்கட்ட பயிற்சியை கொடுத்தார் ஆசிரியர். மன்னரின் மகனோ அந்த விளையாட்டிற்கு ஆர்வம் குறைவாக இருப்பதால், அவனை மன்னனிடம் நடந்ததை சொல்லிவிட்டு மன்னரிடம் ஒப்படைத்து விட்டு சென்றார் ஆசிரியர்.
காலங்கள் ஓடின!
ராஜா கிளர்ச்சிகளை சிறு வயதிலே எதிர்கொண்டார். ஒவ்வொரு சூழலையும் தனக்கு சாதகமாகவும் திறன் கொண்டவர்.
மன்னரின் பதவிக்கு ஆபத்துக்கு உள்ளானது. படித்த பையனாகவும் அனைத்து திறன் கொண்டவனாகவும் வலம் வந்த ராஜா மன்னர் பதவிக்கு தகுதி பெற்றவனாக மக்கள் சக்தி கொண்டவானக வந்ததால் மன்னர் அவனை அழிக்க முன் வந்தார். என்னுடைய பார்வையில் ஒரு வரி படித்திருக்கிறேன் கேளுங்கள்.
“தட்டத் தட்ட பந்துமே” “தாவி தாவி குதிக்குமே” “வெட்ட வெட்ட விளையும்” “விரைந்து விரைந்து வளருமே” என்று அதுபோல் தான் ராஜாவின் வாழ்க்கை !
மன்னர் அழிக்க முன் வந்தார். ஆனால் ராஜாவுக்கே பதவி ஆசை இல்லை. இதை அறிந்த மன்னர் ராஜவிடம் சரணடைந்தார். உடனே அவனுக்கு படைத்தளபதி என்ற கௌரவத்தைக் கொடுத்தார் மன்னர். தம் குடும்பம் ஏழ்மையில் இருப்பதால் படைத்தளபதி பட்டம் கொஞ்சம் வறுமையிலிருந்து மீட்கும் என்று அம்மாவுக்கு சற்று உதவியாக இருக்கும்.
படிப்பு, திறமை இதற்கு முன் பணிவிற்கு அனைத்தும் பணிந்து விடும் என்பதே உண்மை.
தலைமை பண்பிற்கு நாட்டின் மன்னனாகவோ இருந்தால் தான் தலைமை அல்ல! சிறு தொழிலும் நம் திறமை, அதன் மூலம் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று மிக்கவனாகவோ இருப்பதோ ஓர் விதத்தில் தலைமை பண்புதான். படிப்பும் திறமையும் ஆவணப் படுத்தப்பட வேண்டியவை. அவை நாம் வருங்காலத்திற்கு விட்டுச் செல்லும் பொக்கிஷங்கள்! அது மட்டுமே பிற்காலத்திற்கு நாம் கொடுக்க வேண்டிய அழியாச் சொத்துக்கள்!.
Leave a Reply