ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக குஜராத்துக்கு சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் கட்சியை வழுப்படுத்துவது தொடர்பாக தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “குஜராத் நமக்கு முக்கியமான மாநிலம். நாம் இங்கு மனச்சோர்வடைந்ததாகத் தெரிகிறது. ஆனால், இங்கு பாஜகவை தோற்கடிப்போம். மாற்றம் குஜராத்திலிருந்தே தொடங்கும். இந்த போராட்டம் அரசியலில் மட்டுமல்ல, கருத்தியலானது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை தோற்கடிக்க முடியும். கட்சியில் சில மாற்றங்களைக் கொண்டுவர முடிவு செய்துள்ளோம். அதற்காக மாவட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டோம். நிர்வாகிகளுக்கிடையேயான போட்டி ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும்.
இரண்டு வகையான குதிரைகள் உள்ளன, ஒன்று பந்தயங்களுக்கு, மற்றொன்று திருமணங்களுக்கு. காங்கிரஸ் சில சமயங்களில் திருமணக் குதிரையை பந்தயத்திற்கும் பந்தயக் குதிரையை திருமணத்திற்கும் அனுப்புவதாக மக்கள் சொல்கிறார்கள். அதனால் சரியான தலைவர்களுக்கு சரியான கேரக்டரை ஒதுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த குதிரைகளை நாங்கள் பிரிக்க விரும்புகிறோம். இது மாவட்ட தலைவர்களுடன் கட்சிக்கும் இடையேயான உறவை மேம்படுத்த, அந்த பகுதிகளுக்கே சென்று ஆலோசனை மேற்கொள்ளும் முடிவு எடுத்துள்ளோம் .பாஜகவுடன் இணைந்த பலர் கட்சியில் உள்ளனர். நாம் அவர்களை அடையாளம் கண்டு, கட்சியிலிருந்து மெதுவாக விலக்க வேண்டும்”
இவ்வாறு ராஜிவ் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.
Leave a Reply