நடப்பு ஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைப்பெற்றது. போட்டியில் ஹைதராபாத்-குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் குஜராத் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களின் முடிவில் குஜராத் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 76 ரன்களும், ஜோஸ் பட்லர் 64 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியின் ஜெய்தேவ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை எடுத்தார். இதன்மூலம் ஹைதராபாத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனையடுத்து 225 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 186 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன்மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.
Leave a Reply