தி செம்மொழி (the semmozhi) என்பது தமிழ் ஊடகப் பரப்பில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஊடக ஜனநாயகத்தை சென்னை முதல் குமரி வரை விரிவாகப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு மாறுபட்ட ஊடக தளம் ஆகும். 2013 முதல் திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளிவந்த லட்சிய முழக்கம் வார இதழின் மறுஉருவாக்கமாக திகழும் தி செம்மொழி, துல்லியமான செய்திகளையும், பொறுப்புணர்வுடன் வழங்கப்பட்ட அரசியல் நடுநிலையான கட்டுரைகளையும் தமிழ்மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
துல்லியமும் தெளிவும்.
செய்திகளை மிக வேகமாக பரப்புவதைவிட அவற்றை துல்லியமாகவும் தெளிவாகவும் உண்மையாகவும் வழங்குவதையே தி செம்மொழியின் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளது.
பாரபட்சமற்ற செய்தி.
அனைத்து தரப்பினருக்கும் சமமான செய்திகளை வழங்கி, மக்களின் தனிப்பட்ட விவரங்கள், தவறான அல்லது சித்தரிக்கப்பட்ட செய்திகள், சாதி/மத வெறியூட்டும் செய்திகளை முற்றிலும் தவிர்க்கும்.
துறை சார்ந்த கட்டுரைகள்.
அரசியல், சமூக, பொருளாதாரம், பண்பாடு, கலை, அறிவியல், ஜோதிடம், பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தினசரி கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இவற்றை அந்தந்த துறைகளின் நிபுணர்கள் எழுதுவதால், வாசகர்களுக்கு துல்லியமான அலசல்கள், மதிப்பீடுகள், பாராட்டுகள் கிடைக்கின்றன.
தி செம்மொழி துல்லியமான செய்திகளையும் ஆழமான கட்டுரைகளையும் அரசியல் செய்திகளையும் வழங்கி, தமிழ் ஊடகத்தில் தனித்துவம் வாய்ந்த தரமான ஊடகமாக திகழ்வதைத் தனது இலக்காகக் கொண்டுள்ளது.
தமிழ்மொழி, கலாச்சாரம், சமூகநீதி மற்றும் அரசியல் அடிப்படையில் 1980-களிலிருந்து நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விழிப்புணர்வுக்காக செயற்பட்டு வருகிறார். தனது வாழ்க்கை முழுவதும், தமிழ்மொழியின் மேம்பாடு, சமூக நீதி, மக்களின் உரிமைகள் போன்ற அடிப்படைகளை முன்வைத்து பல்வேறு அரசியல் மேடைகள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள் மற்றும் நாடகங்கள் மூலம் தன்னுடைய கருத்துக்களை தெளிவாக பகிர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கியவர்.
அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையின் முக்கிய கட்டமாக, 1986 ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரில் தமிழர் உரிமைகள், இலங்கைத் தமிழர்களின் நலன், மற்றும் தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற்றத்தை ஆதரிக்கும் நோக்கில் போராட்டத்தில் பங்கேற்றார். தமிழ் மொழி மற்றும் தமிழர் உரிமைகளுக்காக இவர் மேற்கொண்ட இந்த போராட்டம் அவரது அரசியல் பயணத்தில் முக்கிய பக்கமாகும். இந்தப் போராட்டத்தின் விளைவாக சிறைசெல்லும் அளவிற்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பு, தமிழ்மொழி மீதுள்ள அவரது ஆழமான பாசமும் ஒழுங்கற்ற சமூகம் மீதுள்ள உணர்ச்சியையும் வெளிப்படுத்தியது.
2013 ஆம் ஆண்டு, தனது நீண்டகால இலட்சியங்களின் வெளிப்பாடாக “இலட்சிய முழக்கம்” எனும் வார இதழை தொடங்கி, அதன் ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். சமூக நலனுக்கான செய்திகள், சமூக நீதி சார்ந்த கட்டுரைகள் மற்றும் ஆழமான பார்வையுடன் பல்வேறு கருத்துக்களை மக்களிடத்தில் பரப்பி, சமூக மாற்றத்திற்கான வலிமையான குரலாக தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறார்
பொருளியல் துறையில் ஆழமான அனுபவம் கொண்ட ஆலோசகரும் . கலை மற்றும் இலக்கியத்தின் மீது ஆழமான ஆர்வம் கொண்ட இவருக்கு, அரசியல் துறையிலும் குறிப்பிடத்தகுந்த ஈடுபாடு உண்டு. மேலும், இவர் கதை ஆசிரியராகவும் திகழ்ந்து, தனது எழுத்துத்திறனை வெளிப்படுத்துகிறார்.