அஜித் கார் ரேஸிங் டீம் வெளியான அசத்தல் வீடியோ..!
அஜித் குமார் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஏழு நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துவிடுமாம். அதனைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் அஜித்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் குட் பேட் அக்லி படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம். ஆதிக் ரவிச்சந்திரனின் வேலை செய்யும் விதம் அஜித்திற்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக ஆதிக் உருவெடுப்பார் என்றும் பேச்சுக்கள் வருகின்றன.
கார் ரேஸில் அஜித்தின் டீம்
அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் அஜித் ஸ்பெயின் நாட்டில் நடைபெற இருக்கும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருக்கின்றார். அதற்காக தற்போது அஜித் ஒருபக்கம் தீவிரமாக தயாராகி வருகின்றார். தற்போது கார் ரேஸில் அஜித்தின் டீம் பற்றிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி செம ட்ரெண்டாகி வருகின்றது. அஜித் செம ஸ்டைலாக அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில் காணப்படுகின்றார். முக்கியமாக அஜித் மிகவும் சந்தோஷத்துடன் அந்த புகைப்படங்களில் காணப்படுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு பிறகு அஜித் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள இருக்கிறாராம். ஸ்பெயினில் நடைபெறும் பந்தயம் மற்றும் அடுத்த வருடம் துபாயில் நடைபெறவுள்ள பந்தயங்களில் அஜித் கலந்துகொள்ள இருக்கின்றார். இதற்கு முன்பு இந்தியளவில் நடைபெற்ற பல கார் பந்தயங்களில் அஜித் கலந்துகொண்டுள்ளார். மேலும் ஜெர்மனி, மலேசியா போன்ற நாடுகளில் நடந்த கார் பந்தயங்களிலும் அஜித் கலந்துகொண்டுள்ளார்.