சுயமரியாதைச் சுடராக!
ஆற்றல் கொண்ட மறவனாக!
மூடநம்பிக்கைகளை
மக்கள் மத்தியில் ஒழித்த சிங்கமாக!
அடிமைப்பட்டிருந்த மக்களை தனது திறமையால் தட்டி எழுப்பிய புரட்சிவாதியாக!
மேடையில் பேச்சுக்கே பிறந்த சிங்கமாக பாயும்புலியாக கொண்ட பேச்சாளராக!
எதிர்க்கட்சியினர்
ஏமாந்துவிடாதே
சாதியா அதை சாகடி
மதவெறியா அதை மங்கவை
போன்ற எழுத்துகளின் முகவரியால் சுயமரியாதை பெற்றுத் தந்த தளபதி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அய்யா அவர்களை சாரும்!
அழகிரி தான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில்
“சுயமரியாதை சங்கம்”என்ற பெயரில் பலரை உறுப்பினராக கொண்டு ஒரு சங்கம் ஆரம்பித்தார்.
அதன் பிறகு தான் தந்தை பெரியாரால் “சுயமரியாதை இயக்கம்” தொடங்கப்பட்டது.
பிறகு அத்தகைய சூழலில் இரண்டாம் உலகப் போர் தொடங்கிய போது இளம் போராளிகளை
ராணுவத்தில் சேர்ப்பதற்காக “ரெஜினல் லெக்சராக” அழகிரி நியமனம் செய்யப்பட்டார்.
அவரும் பசுமலை என்ற இடத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார்.
பேச்சு! அழகிரிக்கு சொல்லவா வேண்டும்!
அவருடைய பேச்சில்
ஓர்
விந்தை இருந்தது!
வார்த்தைகள் சுனை
போல் ஊறியது!
மலர்ச்சி இருந்தது!
புரட்சி இருந்தது!
புதினம் இருந்தது!
புனிதம் இருந்தது!
பசுமலை இடத்தில் பேசியது போர் பற்றி அல்ல!
சுய மரியாதை இயக்க பிரச்சாரம் தான்!
குரல் ஓசை எதிர்ப்புகளை தட்டியது!
இது பற்றி புகார் குவியல்கள் குவிந்தன!
உடனே கவர்னர் அழகிரிக்கு அழைப்பு விடுத்தார்.
மறுநாள் இருவரும் சந்தித்தனர்.
அழகிரி” என் பிரச்சாரத்தால்
பட்டாளத்துக்கு
ஆள் சேருகிறார்களா
என்று மட்டும் பாருங்கள்.”
என்று ஆங்கிலத்தில்
குருதி சூடு ஆவதற்கு
ஏற்றவாறு பதில் கூறினார்
அஞ்சா நெஞ்சன்.
கவர்னர்,”உங்களை இழக்க நாங்கள் தயாராக இல்லை எச்சரித்து அனுப்புகிறேன்” என்றார்.
அழகிரி வெகுளி கொள்ளாமல் புளகாங்கிதம் கொண்டு,”எச்சரித்து அனுப்புகிறேன் என்றால் நான் தப்பு செய்தேன் என்று பொருளாகும்.
உங்கள் எச்சரிக்கை, மன்னிப்பு எனக்கு வேண்டாம்”
என்று கூறி விட்டு முன்னே எழுதி வைத்து இருந்த ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம்
கொடுத்து விட்டு வெளியேறினார்.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு,ஆதிக்கம்,
எதிர்ப்பை மையமாக கொண்டதே அரசியல் களம்.
மக்களை இந்தி எதிர்ப்பை மனதில் பதிய வைப்பதே அரசியல் யுத்தமாக இருந்து வந்தது.
இந்தி திணிப்பு திராவிட அரசியலில் ஓர் முக்கிய புள்ளியாக இருந்து வந்தது.
அதற்கு முன்னரே பெரும் போராட்டம் ஒன்றை “தமிழர் பெரும் படை”என்ற பெயரில் தொண்டர்களை திரட்டி புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டார் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. திருச்சியில் இருந்து 100 பேர் கொண்ட தமிழர் படையுடன் ஊர்வலமாக
இரண்டு மாதம் 250 மைல் கடந்து நடந்தே
சென்னை வந்து பிரச்சாரம் முடித்தார்.
திராவிட இயக்க போராளி தந்தை பெரியார் 11.09.1938
அன்று வரவேற்று
கடற்கரையில் பாராட்டு விழா நடத்தினார்.
மற்றொரு செய்தி கூற விழைகிறேன்.
அழகிரி வாழ்நாள் முழுவதும் மதம், கடவுள், சாதி ஒழிக்க போராடினார்.
அவரை பற்றிக் கொண்ட காச நோயிலிருந்து மட்டும் அவரால் போராட முடியவில்லை.
நட்பிற்கு உதாரணம்,
பேரறிஞர் அண்ணா தான்.
அண்ணா அவர்கள்
அழகிரியின் நோய் சிகிச்சைக்காக பண உதவி செய்தார்.
அழகிரி,சாகும்வரை மறக்க மாட்டேன்
என்று கண்ணீர் மல்க கூறினார்.
எத்தனை எதிர்ப்புகளும், கல்லடி,சொல்லடி, ஏன் செருப்படி கூட பெற்று சீர்திருத்த தந்தை ஆக கடைசி காலத்தில் அஞ்சா நெஞ்சன் ஆக விளங்கினார். திருவாரூரில் நடந்த கூட்டத்தில் அழகிரி உரையாற்றும் போது
மயங்கி விழுந்தார்.
அழகிரியின் மீது அளவு கடந்த பாசமும்
பேச்சின் மீது கொண்ட ரசனையும்
சிறுவனாக இருந்த போதே ஈர்க்கப்பட்டதால்
எதற்கு சிரமம்,மேடை பேச்சு கொள்ளாமலே
இருக்கலாமே
உடம்பை பார்த்து கொள்ளுங்கள் அய்யா என்று சொன்னார் அந்த சிறுவன். அதை கேட்ட அஞ்சா நெஞ்சனோ, “நான் பேச்சை நிறுத்தினால்
நாடு அழுக்காகி விடும்” என்று கூறினார்.
அவருடைய சொற்கள் அச்சிறுவனை மிகவும் கவர்ந்தது.
அச்சிறுவன் தான்
தமிழ் வளர்த்த
முத்தமிழ்
பற்று கொண்டவர்
ஆர்வம் கொண்டவர்
பேச்சாளர்
எழுத்தாளர்
கவிஞர்
அவர்தான்
தமிழ் இனத் தலைவர்
கலைஞர். பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் நம்மால் மறக்க முடியாத மனிதர் மட்டுமல்ல;
சரித்திரத்தில்
மறக்க கூடாத மனிதரும் கூட…
அவருடைய புரட்சி எந்நாளும்
ஓங்கட்டும்;
அவருடைய ஆற்றல் எந்நாளும் மறவாமல் இருக்கட்டும்.
நன்றி
அருமை