அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்: தேர்தல் ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை
சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்த விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகள் தீர்வாகும் வரை, இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டாம் என சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் அடிப்படையில், தேர்தல் ஆணையம் நான்கு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கின் போது, “கட்சியுடன் தொடர்பில்லாதவர்கள் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை” என்று எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்ற நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து, ஜனவரி 27க்குள் பதிலளிக்க ஆணையத்துக்கு உத்தரவிட்டது
Leave a Reply