
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாக்லா பாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வீடு இடிந்து தரைமட்டமானது. மேலும் இந்த வெடி விபத்தில் அங்கிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட போது 5 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மேலும் சிலர் காயங்களுடன் மீட்க பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்ற தகவல் தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.