இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய வென்ற நிலையில், ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வென்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதன்மூலம், தொடரை வெல்வதற்கான வாய்ப்பையும் இங்கிலாந்து அணி தக்கவைத்துள்ளது. இருப்பினும், தற்போதும் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான நன்காவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி புனேவில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும். அதேநேரம், இன்றைய போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இங்கிலாந்து அணி தீவிரம் காட்டும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இதில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாத்து வருகின்றனர்.

அணிகளின் விவரம்: 

இந்தியா: சஞ்சு சாம்சன் (வி.கீ), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, துருவ் ஜூரல், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி.

இங்கிலாந்து: பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேமி ஸ்மித் (வி.கீ), ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வூட், அடில் ரஷித்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *