இந்தியா டுடே டாப் 10 அரசியல் தலைவர்கள் முதல் இடத்தில் மோடி 8வது இடத்தில் ஸ்டாலின்
டெல்லி: இந்தியா டுடே பத்திரிகை தமிழ்நாட்டின் அரசியல் கட்சி தலைவர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நான்காவது இடத்திலும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எட்டாவது இடத்திலும் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டுக்கான அரசியல் கட்சித் தலைவர்
இந்தியா டுடே பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் ஆளுமை மிக்க அரசியல் கட்சி தலைவர்களின் டாப் 10 பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான அரசியல் கட்சித் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தாக்கம் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் அரசியலில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதது, இந்தியா கூட்டணி பலமான எதிர்க்கட்சியாக உருவானது, நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு முக்கிய தலைவர்களாக உருவானது, இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தது என்று பல அம்சங்கள் உள்ளன.
2024 ஆம் ஆண்டுக்கான டாப் 10 அரசியல் தலைவர்கள் பட்டியலில்
அந்த வகையில் இந்தியா டுடே வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான டாப் 10 அரசியல் தலைவர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டாவது இடத்திலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி நான்காவது இடத்தில் உள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய தூண்களாக உள்ள ஆந்திரா மாநிலம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஐந்தாவது இடத்திலும், பீஹார் மாநிலம் முதல்வர் நிதிஷ் குமார் ஆறாவது இடத்திலும் இருக்கிறார்கள்.