தி செம்மொழி

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

January 22, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

இருக்கை யாருக்கு? டிச-4ல் வெளியாகிறது மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் டிசம்பர்- 4ம் தேதி முதல்வர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் 230- தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்தக் கூட்டணியில், பாஜக மட்டும் 132- தொகுதிகளை வென்றது. இது மகாராஷ்டிராவில் பாஜக கைப்பற்றிய அதிகபட்ச தொகுதிகள். அதேபோல், இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டே சிவசேனா 57- தொகுதிகளையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

மகாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு

இவ்வளவு பெரிய வெற்றி பெற்று, தேர்தல் முடிவுகள் வந்து ஒரு வாரத்தை கடந்த நிலையிலும், அந்த மாநிலத்தில் இன்னும் புதிய அமைச்சரவையும் முதல்வரும் யார் என்பது முடிவு எடுக்கப்படாமல், பெரும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கடந்த வாரம், ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய மூவருடனும் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் மகாராஷ்டிரா முதல்வர் யார் என்பது குறித்து முடிவு எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பு குறித்து சி.என்.என். நியூஸ்18-க்கு கிடைத்த தகவலின்படி, ஏக்நாத் ஷிண்டே, அமைச்சரவையில் தனது சிவசேனாவிற்கு 12 அமைச்சர் பதவிகளை கேட்டிருக்கிறார்.

பாஜக எப்போதும்போல், இரு துணை முதல்வர்களுடன் ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளது. இதில், தேவேந்திர ஃபட்னாவிஸ் பெயர் தான் முதல்வர் பொறுப்புக்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதேபோல், இரு துணை முதல்வர்களில் ஒன்று ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஒதுக்க பேசப்பட்டது. ஆனால், அவர் அதனை மறுத்துள்ளார். மேலும், அந்தப் பதவிக்கு தனது மகன், ஸ்ரீகாந்தை கொண்டுவரவும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். மற்றொரு பக்கம் அஜித் பவார் ஒரு துணை முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதி என்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *