ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட விருப்பமுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி மறைவடைந்ததை அடுத்து தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தலும், பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் தேசிய தலைவர்களுடன் பேசி விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படும்,” என்று குறிப்பிட்டார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதால், தொகுதிப் பங்கீடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பது எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply