ஜோசப் என்ற ஓர் சிறந்த எழுத்தாளர்.
புத்தகம் எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதில் கெட்டிக்காரர்.
ஒவ்வொரு வரிகளையும் செதுக்கி செதுக்கி
ஓர் சிற்பமாக வடிவம்
அமைப்பவர்.
அவருடைய எழுத்து
நெருப்பில் சுடர்
விட்டு எரிவது போல
பிரகாசிக்கும்.
அவருக்கு அம்மா, அப்பா என இருவரும் இல்லை.
அவருடைய படிப்பு கடன் வாங்கி படிப்பதற்கு தள்ளப்பட்டார்.
குறுகிய காலத்திலேயே பெற்றோர் இல்லாத காரணத்தால் கல்வியில் பாதியில் நிறுத்தப்பட்டார்.
முன் நிகழ்வு ஒன்றை கூறுகிறேன்:
மரண படுக்கையில் இருக்கும்போது அப்பாவிடம் ஓர் கேள்வி.
“நீங்கள் இறக்க போகிறீர்கள்.உங்கள் மனம் இப்போது நிம்மதியாக இருக்கிறதா?
இல்லை என்று பதில் அளித்தார்.
தனது வாழ்நாளில்
வறுமையை நண்பனாக கொண்ட நான் எனது மகன் அவ்வாறு வாழ மாட்டான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது
காரணம், அவனுக்கு
இலக்கிய திறமை
இருக்கிறது.
அவன் பிழைத்து கொள்வான் என்று கூறியபடி இறப்பை நோக்கி சென்று விட்டார்.
காலங்கள் ஓடின!!
ஜோசப் இன் சித்தப்பா கென்னடி
ஜோசப் கல்விக்காக செலவு செய்ய முன் வந்தார்.
ஆனால் ஜோசப் இன் அத்தை நிராகரித்தார்.
அவனுடைய வாழ்வு
ஒரு நெருப்பில் நடப்பது போல என்னாலும் பசி பினிக்கு தள்ளப்பட்டார் ஜோசப்.
பசி தாங்காமல் தனது எழுத்தால் தெருமுனை பாடல்கள் நடத்தி சொற்ப தொகையை பெற்று வாழ்ந்து வந்தான்.
அவர் பெற்று வந்த
தொகையை ஓதாரி
தனமாக செலவு செய்து குடி பழக்கத்திற்கு ஆளானான்.
இதனால் அவருடைய
வாழ்வு திசை மாற தொடங்கின.
தெருமுனை பாடல்கள் பாடும் வாய்ப்பும் பறிபோனது.
தன்னுடைய படைப்புகள் விலை போகவில்லயே என்ற
ஏக்கமும் தாக்கமும்
ஜோசப் ஐ வதைத்தது.
குடிப்பழக்கத்திற்கு
ஆளனான்.
இத்தகைய சூழ்நிலை எல்லா
எழுத்தாளர்களும் தன் வாழ்நாளில்
சந்தித்துதான் வரலாற்றில் இடம் பெற முடியும் என்பது
சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட உண்மை.
கடன் மூலம் வாழ்வில் தத்தளித்த
ஜோசப் வாழ்வில் ஓர் நண்பனாக துணையாக
இடம் பெற்றார்.
அவர் தன் செல்வம் என்ற நண்பர்.
செல்வம் ஜோசப் எழுதிய ஒர்
புத்தகத்தை எடுத்து கொண்டும் புத்தக வியாபாரி இடம் விலைக்கு கொடுத்து
ஜோசப் வாழ்வில் கடன் சுமையை குறைத்தார்.
அவனுடைய படைப்புகள் நன்றாக விலை போயின.
நல்ல நன்பன்னொருவன் இருந்தால் வாழ்வு தீய வழியில் செல்லாது.
குடிப்பழக்கத்தை
அறவே நீக்கினான்.
எழுத்தாளர் வரிசையில் ஓர் முக்கிய இடத்தில் வளம் வர ஆரம்பித்தார்.அதற்கு
முழு காரணம் நட்பு மட்டுமே.
“கிணற்றுக்குள்
விழுந்தவரை காப்பாற்றாமல் மேலே நின்று கொண்டு சிரிப்பவர்கள் பலர்;
இறங்கி காப்பவரே
சிலர்;”
எந்த ஒரு காயத்திற்கு மருந்து ஆவான் நண்பன்!!!!