மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் இன்னிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்து தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாளுக்கு புகலஞ்சலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது (எக்ஸ்)ட்விட்டர் பதிவில் அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே தவெக முதல் மாநாட்டில் கூத்தாடி என்ற சொல்லுக்கு வரும் விமர்சனங்களுக்கு விஜய் விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில் “கூத்தாடி ” என சுட்டிக்காட்டி எம்ஜிஆருக்கு புகழஞ்சலி தெரிவித்திருப்பது அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்.— TVK Vijay (@tvkvijayhq) January 17, 2025
Leave a Reply