“எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” புத்தகத்தை வெளியிடும் விஜய். புறக்கணித்த திருமாவளவன்!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும், வாய்ஸ் ஆஃப் காமென் எனும் அமைப்பின் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனாவின் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் ” என்ற புத்தக வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என தகவல் வெளியானது.
புத்தக வெளியீட்டு விழா
மேலும் புத்தகத்தை விஜய் வெளியிட, அதனை திருமாவளவன் பெற்றுக்கொள்வார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த புத்தக வெளியீட்டு விழா குறித்த அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. அதில் திருமாவளவனின் பெயர் இடம் பெறவில்லை. மாறாக ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூலை தவெக விஜய் வெளியிட, அதனை திருமாவளவனுக்கு பதிலாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு பெற்றுக் கொள்கிறார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி
இந்த அழைப்பிதழ் முக்கிய பிரமுகர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. கட்சியின் நிர்வாகி நடத்தும் புத்தக வெளியீட்டு விழாவில் அக்கட்சியின் தலைவரான திருமாவளவன் பங்கேற்காதது பெரும் பேசு பொருளாகியுள்ளது. விஜய்யுடன் ஒரே மேடையை பகிர விரும்பாதததால் திருமாவளவன், இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.