கலைஞர் தமிழ் மண்ணை சுவாசித்தவர். தமிழ் மக்கள் மீது பாசத்தை கொட்டியவர்.
தமிழ் மக்களிடம் தமிழ் உணர்வை ஊட்டியவர். தமிழ் மக்களிடம் தமிழ் இலக்கியத்தை கொடுத்தவர்.
தமிழை செம்மொழி ஆக்கியவர்.பிற மொழி கலவாது இந்தி ஆதிக்கத்தை ஒழித்தவர்.
தமிழுக்காகவே வாழ்ந்தவர். பூம்புகருக்கு சென்றவர். இளைஞராக வாழ்ந்தவர்.
நெஞ்சுக்கு நீதி கொடுத்தவர். உரை எழுதியவர். புதினம் புதிதாக கொடுத்தவர்.
அவரின் எழுது கோளின் மை பல பேரை எழுத வைத்தது.
சிந்தனையின் எடுத்துக்காட்டு இவரே. குறளுக்கு ஓவியம் தந்தவர்.
உடன் பிறப்பே என்ற சொல்லால் உறவு கொண்டவர்.சங்க தமிழ் எழுதியவர்.
ரோமாபுரி பாண்டியனின் மூலம் வணிகத்தை தெரிய வைத்தார். தொல்காப்பிய பூங்காவை அமைதி பூங்காவாக அறிமுக படுத்தினார். இலக்கியத்தின் மூலம் மணி மகுடம் சூடி கொடுத்தார்.
ரத்த கண்ணீர் சொட்டினார் தன் இலக்கியத்தில்.
தென்பாண்டி சிங்கமாக திகழ்ந்தார் தன் இலக்கியத்தில்.
அம்மா என்ற சொல்லின் மூலம் தாய்மை கொடுத்தார் தன் இலக்கியத்தில்.
தமிழ் சமூகத்தை ஆண்ட சிங்கம் அல்லவா. தூக்கு மேடை ஏறியவர் தன் இலக்கியத்தில்.
வீரம் நிறைந்த வசனம் கொடுத்து வீரத்தை தூண்டியவர்.
வளம் நிறைந்த வசனம் கொடுத்து தமிழை செம்மை ஆக்கியவர்.
முதல் நூலாக கிழவன் கனவு கண்டார். நிறைவு நூலாக நெஞ்சுக்கு நீதி கொடுத்தார்.
இவ்வளவு வரலாறு கண்ட முத்தமிழ் அறிஞர் மறைந்தாலும் அவருடைய புரட்சி கரமான கரடுமுரடான பாதை நிறைந்த நினைவு அலைகள் என்னாலும் மறவாது.
அவருடைய புகழ் நிலைக்கட்டும்!
தமிழ் வளரட்டும்!