கங்குவா 17 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
திடீரென ட்ரெண்டாகும் கங்குவா..குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்..என்ன காரணம் தெரியுமா ?
சூர்யா நடிப்பில் சிவாவின் இயக்கத்தில் உருவான கங்குவா திரைப்படம் கடந்த மாதம் திரையில் வெளியானது. ஞானவேல் ராஜாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சூர்யாவின் திரைப்பயணத்திலேயே அதிக பொருட்ச்செலவில் உருவான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது. படம் வெளியான பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை கங்குவா பூர்த்தி செய்யவில்லை.
கடுமையான விமர்சனங்களுக்கு கங்குவா உண்டானது.மேலும் கடுமையாக ட்ரோல் செய்யவும்பட்டது. இது சூர்யா ரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவின் படம் திரையில் வெளியாகின்றது என்றதும் அனைவரும் கங்குவா திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்தனர். வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு நேர்மாறாக கங்குவா அமைந்துவிட்டது. படத்திற்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன் பிறகும் கங்குவா படத்திற்கு வரும் விமர்சனங்கள் நின்றபாடில்லை.
இந்நிலையில் தற்போது திடீரென கங்குவா படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ட்விட்டரில் கங்குவா திரைப்படம் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதற்கு காரணம் கங்குவா திரைப்படத்தின் HD பிரிண்ட் வெளியானது தான். கங்குவா திரைப்படம் டிசம்பர் 13 ஆம் தேதி தான் OTT யில் வெளியாகின்றது. ஆனால் அதற்கு முன்பே இப்படத்தின் HD பிரிண்ட் வெளியாகிவிட்டது. எனவே அதன் மூலம் கங்குவா திரைப்படத்தை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.