காவலர்களுக்கு அரசுப் பேருந்தில் இலவச பயணம்
அரசுப் பேருந்தில் சீருடையுடன் ஏறிய காவலர், பயணச்சீட்டை எடுக்க மறுத்து பேருந்தின் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் காணொளி இணையத்தில் வைரலாகப் பரவியது. இறுதியில் உடனிருந்த பயணிகள் சமாதானப்படுத்தியதால் அந்தக் காவலர் பயணச்சீட்டை வாங்கினார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், அரசுப் பேருந்தில் காவலர்கள் கட்டணமின்றிப் பயணிக்க அனுமதியில்லை என அறிவித்துள்ளது. மேலும் நடத்துநருடன் வாக்குவாதம் செய்த காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
அறிவித்த திட்டம் என்ன ஆனது?
இந்த சர்ச்சைகள் ஒருபுறம் இருக்க, கடந்த 2021ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அரசுப் பேருந்தில் ஒரு மாவட்டத்திற்குள் இலவசமாகப் பயணம் செய்ய காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்’ என்று அறிவித்தார். அந்தத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?