பா.ரஞ்சித் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் ஆர்யா முதன்மை கதாபாத்திரமாக நடித்து, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றார். இப்போது, இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடித்ததாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
தனது துணை இயக்குநரின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், “சார்பட்டா பரம்பரை 2 படத்தின் இறுதி காட்சியை எழுதுவதில் சிறந்த அனுபவம் கிடைத்தது. நடிகர் ஆர்யா படத்திற்காக தனது உடலை தயார் செய்து வருகிறார்,” என்றார்.
முதல் பாகம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது தொடர்பாக எவ்வித தகவலும் இன்னும் வெளியாகவில்லை.