ஐபிஎல் 2025 தொடரின் 22வது போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி விக்கெட்டை பற்றி கவலைக் கொள்ளாமல் பவுண்டரி, சிக்ஸ்ர் என அடித்து தள்ளினர். சென்னை அணியின் பீல்டிங் சரி இல்லாததால் பல கேட்ச்கள் தவறவிடப்பட்டது.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தனர். பஞ்சாப் தரப்பில் 9 சிக்ஸர்கள், பல பவுண்டரிகள் என 103 ரன்கள் அடித்தார் பிரியன்ஷ் ஆர்யா. ஒரு பக்கம் விக்கெட் சரிய அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் பஞ்சாபின் 219 ரன்களுக்கு பிரியன்ஷ் முக்கிய காரணமாக இருந்தார்.
இதன்மூலம் சென்னை அணிக்கு 220 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை அணி கடந்த சில ஆண்டுகளாக 180 ரன்களுக்கு மேல் எடுக்கும் எதிரணிகளின் ரன்களை சேஸ் செய்ய திணறி வரும் நிலையில் இன்று 220 ரன்கள் எடுக்குமா என ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
கடந்த மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து சென்னை அணி தோல்வி தழுவி வரும் நிலையில் இன்று வெற்றிப் பெறுமா என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும்.
Leave a Reply