
வழக்கறிஞர்கள் சட்டம், 1961 இன் கீழ் நாடுமுழுவது பார் கவுன்சில் இது நிறுவப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் பதிவை ஒழுங்குபடுத்துதல், வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வரையறுத்தல், சட்டக் கல்வியின் தரத்தை உயர்த்துதல் ஆகியவை பார் கவுன்சிலின் முக்கியப் பணிகள் ஆகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பார் கவுன்சில் உள்ளது. இந்த அனைத்து பார்கவின்சில்களும் இந்திய பார் கவுன்சிலுக்குக் கீழ் செயல்படுகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் முழுக்க உள்ள வழக்கறிஞர் சங்கங்களுக்கான தேர்தல்கள் பல மாநிலங்களில் நடத்தப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இது தொடர்பான வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது