டிச 9-ல் கூடுகிறது சட்டசபை; டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு!
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது
அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் சட்டசபை தலைவர் அறையில் நடைபெற்றது. எல்லா கட்சி உறுப்பினர்களுடன் கூடி ஆலோசித்தோம். டிசம்பர் 9, 10ம் தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார். இரண்டாம் நாள் பல விவாதங்கள் நடைபெற்று மசோதாக்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.