டெல்லியின் வளர்ச்சிக்காக ரேகா குப்தா முழுவீச்சில் பாடுபடுவார் என பிரதமர் மோடி நம்பிக்கை!

70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 48 இடங்களிலும், ஆளும் கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்டியை கைப்பற்றியது. இதனையடுத்து, டெல்லியின் புதிய முதலமைச்சர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. பாஜகவின் பர்வேஷ் வர்மா, வீரேந்திர சச்தேவா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாயா, அஜய் மஹாவர் ஆகியோரது பெயர்கள் முதலமைச்சர் பதவிக்கு அடிப்பட்டன. இந்த சூழலில், முதலமைச்சர் பதவிக்கு ரேகா குப்தா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

ரேகா குப்தா டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சருடன் 6 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், டெல்லி முதலமை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவிற்கு வாழ்த்துகள். அவர் அடிமட்டத்திலிருந்து உயர்ந்து, வளாக அரசியல், மாநில அமைப்பு, நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டு, தற்போது எம்.எல்.ஏ.வாகவும், முதலமைச்சராகவும் உள்ளார். டெல்லியின் வளர்ச்சிக்காக அவர் முழு வீரியத்துடன் பாடுபடுவார் என்று நான் நம்புகிறேன். அவரது பதவிக்காலம் பலமாக அமைய எனது வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். மேலும் டெல்லி முதலமைச்சராக பதவியேற்றுள்ள அனைவருக்கும் என வாழ்த்துகள். இந்தக் குழு வீரியத்தையும் அனுபவத்தையும் அழகாகக் கலந்து, டெல்லிக்கு நல்லாட்சியை உறுதி செய்யும்”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ச்சராக பதவியேற்றுள்ள ரேகா குப்தாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *