தமிழகத்தின் 3-வது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்- 2019 முதல் இன்று வரையிலான அரசியல் பயணம்!
சென்னை: தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை மாலை பதவியேற்க உள்ளார். தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவி வகித்தார். தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வராகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவை மாற்றத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
அமைச்சர்கள் பொன்முடி,கயல்விழி செல்வராஜ், மெய்யநாதன் ஆகியோரது துறைகள் மாற்றப்பட்டுள்ளன. அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உதயநிதி துணை முதல்வராவதில் தாமதம் ஏன்? பின்னணியில் 2 பெரிய டிமாண்ட்! ஸ்டாலின் தீவிர
தமிழ்நாட்டில் முதன் முதலாக 2009-ம் ஆண்டு துணை முதல்வராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். அப்போது முதல்வராக கருணாநிதி பதவியில் இருந்தார், 2009-ம் ஆண்டு மே 29-ந் தேதி முதல் 2011-ம் ஆண்டு மே 15-ந் தேதி வரை துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்தார்.
தற்போது 3-வது துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தந்தை கருணாநிதி முதல்வராக, துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி வகித்தனர். அதேபோல தந்தை மு.க.ஸ்டாலின் முதல்வராக, அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.