தமிழ்நாட்டில் வங்கி கணக்கில் வழங்கப்படும் ரூ.3000 யாருக்கெல்லாம் வரும்?
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான டிசம்பர் மாத தொகை விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ளன. தமிழ்நாட்டில் முழுக்க பின்வரும் 3 முக்கிய திட்டங்கள் மூலம் மாதம் ரூ. 3000 உங்க வங்கி கணக்கில் பெறுவது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு மாதமும் முதல் 2 வாரங்களுக்குள் இந்த தொகை ரிலீஸ் செய்யப்படும். இந்த மாதத்திற்கான தொகை அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது .
மகளிர் உரிமை தொகை ரூ.1000 புது பயனாளிகள் இணைப்பு எப்போது? திட்ட விரிவாக்கம் எப்போது?
முதல் திட்டம்: மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.. இதன் மூன்றாம் தவணை இந்த மாதம் வழங்கப்பட உள்ளது.
இரண்டாம் திட்டம்: அரசு பள்ளிக்கு செல்லும் பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு வீடு தேடி மேலும் ரூபாய் 2000 மொத்தமாக வரும். புதுமை பெண் திட்டம் புதிதாக தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவை மூலம் இந்த பணம் வழங்கப்படும்.