தமிழ் காத்த தலைவர்கள்
“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு”
என்று பாவேந்தர் முழங்கியதற்கேற்ப, நம் மொழியைக் காக்கவும் தமிழ் இனத்தை மீட்கவும், கடந்த காலங்களில் அரும்பாடுபட்ட மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாள் ஜனவரி 25ஆம் தேதி நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெறுகிறது.
1938-ல் வெடித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தாளமுத்து, நடராஜன் ஆகியோர் சிறையிலேயே சித்ரவதை செய்யப்பட்டதால் உயிர் துறந்தார்கள்.
அதேபோல் மொழி போராட்ட வரலாற்றை புரட்டி பார்க்கிற போது நம் உள்ளம் சிலிர்க்கிறது. உணர்வுகள் எழுகிறது. தாய்மொழியை காக்க வேண்டும் என்ற கடமை உணர்வு மலர்கிறது.
மொழிப்போர் கிளர்ச்சிகளில் இந்தி எழுத்துக்களை அழைப்பதற்கும், இந்தி ஆதிக்கம் தமிழகத்தில் நுழைய விடாமல் தடுப்பதற்கு வீறு கொண்டு எழுந்து அரும்பாடுபட்டனர். அவர்கள் மொழிப்போர் தியாகிகள் மட்டுமல்ல. தமிழர் போர்படையின் வீரர்கள். இத்தகைய வீரர்களுக்கு எழுச்சியுடன் வீரவணக்கம் செலுத்துவோம்.
1936 -ல் இந்தி மொழி இந்தியரின் தேசிய மொழியாக அறிவிப்பை தொடர்ந்து 1936 மார்ச் 7 அன்று குடியரசு இதழில் இந்தியை எதிர்த்து உணர்வு எழக்கூடிய அளவிற்கு கண்டன கட்டுரை எழுதினார் தந்தை பெரியார்.
1937 -ல் பேரறிஞர் அண்ணா அவர்களால் பெருமை பெற்ற காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டு மக்களிடையே பெரும் எழுச்சி உருவானது.
1938 -ல் தமிழக பள்ளிக் கூடங்களில் இந்திப் பாடம் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து தந்தை பெரியார் பெரும் போராட்டம் நடத்தினார்.19-02-1940 இல் கோகலே மண்டபத்தில் இந்தியை, எதிர்த்து பெரியார் சிறை செல்லும் போராட்டம் நடத்தினார்.
ஒரு முனையில் பெரியார் வெற்றிகரமாக இந்தி ஆதிக்கத்தை விரட்ட செயல்பட்ட போது மறுமுனையில் இந்தி அறப்போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் அளவில் நம் தென்னாட்டு பெர்னாட்ஷா அண்ணா அவர்கள் செயல்பட்டார். தனது பேச்சு திறனால் கொள்கை உணர்வினால் மொழிப்பற்றால் பெரியார் அவர்களிடம் நட்பு கொண்ட அண்ணா.
1938-ல் பள்ளிகளில் இந்தி பாடம் கட்டாயமாக்கப்பட்டதை கண்டித்து பெரியாருடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழக இளம் வீரர்களே ! தீரர்களை தமிழர்களே தமிழைக் காக்க அறப்போர் நடத்துங்கள், போராடுங்கள்! என்று முழக்கமிட்டார். 1948-ல் ஜூலை 17 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். அதே நாளில் தான் இந்தி எதிர்ப்பாளர்கள் மாநாடு நடைபெற்றது.
1952 ஆகஸ்ட் 1 ல் இந்தி எழுத்துக்களை மத்திய அரசு அலுவலங்களில் பெயர் பலகைகளில் அழிக்கும் போராட்டத்தில் திருச்சியில் பெரியார் ஈரோட்டில் அண்ணா கலந்து கொண்டனர்.
1952 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் திருச்சியில் அஞ்சல் நிலைய பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்களை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் அன்பில் அவர்களுடன் தலைமையேற்று நடத்தினார்.
1953-ல் கோவில்பட்டியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாவட்ட மாநாட்டிற்கு கலைஞர் தலைமை ஏற்றார்.
1960-ல் சென்னை கோடம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்பு மாநாட்டினை அண்ணா நடத்தினார்.
1962-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 3 மாதம் சிறை தண்டைனை ஏற்றார்.
1965-ல் அண்ணா அவர்களால் இந்தி எதிர்ப்பு போராட்டக் குழுத் தலைவராக நியமிக்க பட்டார் கலைஞர்.
பூட்டிய கருப்பு கூட்டின் கதவு திறக்கப்பட்டது
சிறுத்தையே வெளியில் வா
என்ற பாவேந்தர் வரிகளுக்கேற்ப 1938 -ல் நடந்த மொழிப்போரில் தனது இளம் வயதில் திருவாரூரில் மாணாக்கர்களை திரட்டி தமிழ் கொடி ஏந்தி ஓடிவந்த பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையல்ல நாடு இதுவல்லவே என்று கலைஞர் முழங்கினார்.
மொழிப்போரில் பல இடங்களில் மாணவர்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு, சித்திரவதை பல மாணவர்கள் உயிரிழப்பு, சிதம்பரம் ராஜேந்திரன் என்ற மாணவர் துப்பாக்கி சூட்டில் பலி, மாயவரம் தண்டபாணி, (மாணவர் தீக்குளிப்பு), சாரங்கபாணி, விராலிமலை சண்முகம், கீரனூர் முத்து அடிப்படையார் சின்னசாமி இன்றும் ஏராளமானோர் இன்னுயிர் ஈந்தனர்.
தலைவர் கலைஞர் அவர்கள் மீது மாணவர்களை தூண்டி விட்டதாக பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது.
கலைஞர், பாளையங்கோட்டை சிறையில் 6 மாதம் சிறைவைக்கப்பட்டார்.
சிறைக்கு சென்று கலைஞரை பார்த்த அண்ணா, என் தம்பி கருணாநிதி அடைக்கட்ட பாளையங்க்கோட்டை சிறைச்சாலை தான், நான் யாத்திரை செல்லும் தவச்சாலை என்று குறிப்பிட்டது தலைவர் கலைஞர் அவர்களின் தியாகத்திற்கு கிடைத்த பாராட்டு பத்திரமாகும்.
மூண்டெழுந்த மொழிப்போர்களின் காரணமாக இந்தி ஆதிக்கம்விரட்டப்பட்டு நம் அன்னைத் தமிழ் மொழியினைச் செம்மொழியாக உயர்த்திடவும், உலகம் போற்றவும் பெருமையினை தந்துள்ளார் கலைஞர்.
இந்திய சுதந்திரப் போருக்கு இடையே நம் தமிழ் காக்க நீண்ட போராட்டமும், அளப்பறிய தியாகமும் செய்த இனம் தமிழ் இனம். அதில் பெரும் பங்கு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா தலைவர் கலைஞர் இவர்களின் புகழ் என்றும் மறையாது. மறைக்கவும் முடியாது.
தமிழ் காத்த தலைவர்கள் வாழ்க !
வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!
Leave a Reply