சென்னை: திருச்சி அருகே சாலை விபத்தில் விபத்தில் உயிரிழந்த முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும். கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் உயிரிழப்பு வருவாய்த்துறைக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. விபத்தில் உயிரிழந்த கோட்டாட்சியர் குடும்பத்துக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.