காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்
மக்களவைத் தேர்தல், அரியானா தேர்தல், மகாராஷ்டிரா தேர்தல் என வரிசையாக ஒவ்வொரு தேர்தலிலும் மோசடிகளும், முறைகேடுகளும் அரங்கேறிவருகின்றன என்று ஆவேசத்துடன் விகடனுக்கு நேர்காணல் அளித்திருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்.
அரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்கும் என்று பலரும் எதிர்பார்த்தபோது, அங்கு பா.ஜ.க வெற்றிபெற்றுவிட்டது. அடுத்ததாக, மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வே எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வெற்றி அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது.
மகாராஷ்டிரா தேர்தல்
இவை முறைகேடுகளால் கிடைத்த வெற்றி என்று விமர்சிக்கின்றன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். இதில், தேர்தல் ஆணையம் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது காங்கிரஸ் கட்சி. இந்த விவகாரங்கள் குறித்து விகடன் நேர்காணலில் விரிவாகவும், புள்ளிவிவரங்களோடும் பேசுகிறார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பீட்டர் அல்போன்ஸ்.