பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் நேற்று (ஜன.16) அதிகாலை 2.30 மணியளவில் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கொள்ளையனால் தாக்கப்பட்டாதாக செய்தி வெளியாகியுள்ளது. தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்ததால் அவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 20 தனிப்படைகளை அமைக்கப்பட்டன. அதன்படி, நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்டு 30 மணி நேரத்திற்கும் மேலான நிலையில்,
தற்போது, கத்தியால் குத்தியவரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர். மும்பை காவல்துறையினர் சந்தேகப்படக்கூடிய ஒருவரை விசாரணைக்காக இன்று பாந்த்ரா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், அவரிடம் தாக்கப்பட்டதற்கான விவரம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.