தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

July 23, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

July 23, 2025

தமிழ் செய்தி இணையதளம்

நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – தமிழ்நாட்டில் நடைபெறும் இடங்களின் பட்டியல் வெளியீடு!

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான், இந்தியா மீதும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் இரு நாடுகளும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும், இந்தியா தாக்குதல் நடந்த வாய்புள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்தது.

இரு நாடுகள் தங்கள் ராணுவ படைகளை தயாராக வைத்திருக்கும் அதே வேளையில், அதிகபட்ச பொறுமையை கையாள வேண்டும் என ஐநா அறிவுறுத்தியது. இதற்கிடையே இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் இரு நாடுகளிடையே மத்தியஸ்தம் செய்ய சீனா விருப்பம் தெரிவித்தது.

இந்த போர் பதற்றத்திற்கு மத்தியில் உள்துறை அமைச்சகம் நேற்று நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட மாநில அரசுகளை அறிவுறுத்தியது. அதன்படி நாளை (மே.07) வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்குதல், தாக்குதலில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க பயிற்சி அளிப்பது, விபத்துகளின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குதல், தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ளவதற்கான புதிய திட்டத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றில் ஒத்திகை நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் ஒத்திகை நடைபெறும் இடங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்வு நாடு முழுவதும் மொத்தம் 259 இடங்களில் முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில்  கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடைப்பெறவுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top