தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

December 16, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

December 16, 2025

தமிழ் செய்தி இணையதளம்

பாலமேடு ஜல்லிக்கட்டு – 4வது சுற்று முடிவில் 19 பேர் காயம், 5 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி!

பாலமேடு ஜல்லிக்கட்டு – 4வது சுற்று முடிவில் 19 பேர் காயம், 5 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி!

இந்த ஆண்டு பொங்கலை ஒட்டி முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி தை முதல் நாளன்று மதுரை அவனியாபுரத்தில் நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதனையடுத்து, இன்று (ஜன.15) மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் காலை 7.40 மணியளவில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் 1000-ற்கும் பேற்பட்ட காளைகள் மற்றும் 900-ற்கும் மேற்பட்ட மாடுபுடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். மகாலிங்க சாமி மடத்து கமிட்டி கோவில் காளை முதலில் அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றனர்.

போட்டியில் சிறந்து விளங்கும் காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை நான்கு சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. நடந்து முடிந்த நான்கு சுற்றுகளில் மாட்டின் உரிமையாளர்கள் 4 பேர், பார்வையாளர்கள் (சிறுமி உட்பட) 6 பேர் என மொத்தமாக 19 பேர் காயமடைந்தனர். மேலும் ஒருவர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்சுகு அழைத்துச் செல்லப்பட்டார். நான்காவது சுற்று முடிவில் 5 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

4ஆம் சுற்று முடிவில்:

களம் கண்ட மாடுகள் : 107

பிடிபட்ட மாடுகள் : 19
(மொத்த மாடுகள்: 80)

இறுதி சுற்றுக்கு தகுதியான வீரர்கள்:

அடைக்கன் அழகு (S 174 ) – 3 காளைகள்

மனோஜ், (S 152) – 2 காளைகள்

சூர்யா (S 175 ) – 2 காளைகள்

நாட்டு அழகன் (S 179 ) – 2 காளைகள்

செல்வகண்ணன் (S 172 ) – 2 காளைகள்

தொடர்ந்து 5வது சுற்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top