பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் தமிழில் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசம் திருவிழா இன்று (பிப்.11) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட இடங்களில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி அனைவருக்கும்c தைப்பூச திருநாள் வாழ்த்துகளை தமிழில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

”அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!

முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றுடன் வழிகாட்டட்டும். இந்தப் புனித விழாவில் அனைவரின் மகிழ்ச்சிக்காக, நல்ல ஆரோக்கியத்திற்காக, வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *