புஷ்பா 2 முதல் நாளில் இத்தனை கோடி வசூலிக்குமா? பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு
அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம் பெரிய அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. டிசம்பர் 5ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் நிலையில் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது முன்பதிவிலேயே முதல் நாள் ஷோக்களுக்கு மிகப்பெரிய தொகை வந்திருக்கிறது என கூறப்படுகிறது. ஹிந்தியில் மட்டும் தற்போது வரை 1.16 லட்சம் டிக்கெட்டுகள் விற்று இருக்கிறதாம்.
வசூலை வாரி குவிக்கும் சென்சேஷனல் புஷ்பா 2 ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகளா?
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அல்லு அர்ஜுனின் நடிப்பில் மாஸாக உருவாகியுள்ள புஷ்பா 2 படம் அடுத்த வாரம் வெளிவரவுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து 2021ஆம் ஆண்டு வெளிவந்த படம் புஷ்பா 1.
இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.