பெண்களுக்காக பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
அனைத்து உயிரினங்களுக்கும் ஐந்தறிவு என்று ஒன்று உள்ளது. ஆறாவது அறிவு என்பது உண்டு. அதுவே பகுத்தறிவு.
பெண்ணுரிமை என்றாலே தந்தை பெரியார் தான்.
அவர் ஆணாதிக்கத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். நூற்றுக்கணக்கான பெண்களுக்கும், பெண்ணிய சிந்தனையாளர்களும் பெண் விடுதலைக்காக சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தனர்.
1928 முதல் சுயமரியாதை மாநாடு செங்கல்பட்டில் நடந்தது.
அதில் தனியாக வாழும் பெண்கள், விதவைகள் பங்கேற்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தார்.
மேலும், விதவை மறுமணம் சுயமரியாதை இயக்கத்தின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
சுயமரியாதை அமைப்பு மட்டும் தொடங்காமல் தனது வீட்டிலேயே பெண்களுக்கான அமைப்பு ஒன்றைத் தொடங்கி முன்னேற்றத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
பெண்கள் தங்களது பிரச்சனைகளை எடுத்து சொல்வதற்கு அந்த அமைப்பு உதவியது.
சுயமரியாதை இயக்க ஆதரவாளரான டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி தேவதாசி முறையை ஒழித்தார்.
நவீன சிந்தனைகளும் பெண்ணிய சிந்தனைகளும் சோவியத் ரஷ்யா, டர்க்கி போன்ற நாடுகளில் பேசும் போது அதை மொழிபெயர்த்து குடியரசு இதழில் வெளியிட்டு எத்தனை தடைகள் வந்த போதும் கடுமையாக விவாதித்தார்.
பெண்களுக்கான சொத்துரிமைக்காக கடுமையாக போராடினார். பெரியார் கனவை நிறைவேற்றி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை சட்டம் தந்தார்.
பெண்கள் இல்லை என்றால் நாட்டில் முன்னேற்றம் இருக்காது.
ஒரு ஆண் இனம் தோன்றுவதற்கு முன்பு பெண் இனம் தோன்றியது.
8000 ஆண்டுகளுக்கு முந்தைய துவக்க காலத்தில் அனைத்து குலத்திற்கும் தலைவியாய் பிறந்த பெண் தான் தாயாக போற்றப்படுகிறாள்.
மனித குலம் தாய் வழி சமூகத்தில் வாழ்ந்தது. வளர்ந்த்து. வேட்டையாடுவது முதல் போர் வரை பெண்ணே ஆணுக்கு நிகராக தலைமை தாங்கினாள்.
மூவலூர் இராமாமிர்தம், மருத்துவர் தருமாம்பாள் போன்றோர் முன்னின்று 1938 சென்னையில் நடத்திய தமிழ்நாட்டு பெண்கள் மாநாட்டில் பெண்கள் உரிமைக்காகவும், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பெண்களை ஈடுபடுத்தியதற்காகவும் ஈ.வெ.ரா அவர்களுக்கு பெரியார் என்ற பட்டம் பெண்களால் வழங்கப்பட்டது.
தந்தை பெரியாரின் இலட்சியத்தின்படி பெண்கள் நாட்டின் கண்களாக விளங்கி அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்து வருகிறார்கள்.
Leave a Reply