சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் தந்தை பெரியார் குறித்து வெளியிட்ட கருத்துகள், சமூகத்தில் கடும் எதிர்ப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சீமான் கூறியதாவது:
“தந்தை பெரியாருக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? மதுவுக்கு எதிரான போராட்டத்தில் மரங்களை வெட்டி சாய்த்தது தான் பெரியாரின் சாதனை.”
“நம்மில் கீழானவர்கள் என பெரியார் கூறினார். ‘நம்மில் கீழானவர்கள்’ என்பவர்கள் யார்? இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் எதிரிகள் என்று கூறியவர் யார்?”
“உடல் இச்சை வந்தால் தாய், மகள், சகோதரியுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என பெரியார் கூறியதாக…”
சீமான் தெரிவித்த இந்த கருத்துகள், பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்களிடையே கடும் கண்டனங்களை உருவாக்கியது.
திராவிடர் கழகத்தினர் உடனடியாக எதிர்வினை காட்டினர். சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சீமான் இல்லத்தை முற்றுகையிட சில அமைப்புகள் முயன்றன.
அரசியல் தலைவர்களின் கண்டனம்:
திமுக எம்எல்ஏ எழிலன், “சீமான் ஒரு மனநோயாளி; எந்த ஆதாரமும் இல்லாமல், தந்தை பெரியார் மீது தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்” என்று கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
சட்ட நடவடிக்கை:
இந்த விவகாரத்தில், கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில், பெரியார் குறித்து அநாகரீகமாக பேசியதாக சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவம் சமுதாயத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சீமான் தனது பேச்சுக்கு ஆதாரங்களை வழங்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Leave a Reply