மார்க்கெட் ஓபனானதுமே தங்கம் விலை கேட்டாலே காதில் தேன் பாயுதே!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.2) சவரனுக்கு ரூ 480 குறைந்துள்ளது. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மார்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் டிசம்பர் 2 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 480 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,090-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ 100-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,00,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நவம்புர் 30, டிசம்பர் 2 ஆகிய இரு தேதிகளில் சவரனுக்கு ரூ 560 குறைந்துள்ளது.
தொடர்ந்து உயரும் தங்க விலை! வேகமாக அதிகரிப்பது ஏன்? 2 மேஜர் காரணம் இதுதான்! இனி
டிசம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட்டுக்கு விடுமுறை என்பதால் நேற்று முன் தினம் (நவம்பர் 30) விற்கப்பட்ட விலைக்கே தங்கம் விற்பனையானது. அதன்படி டிசம்பர் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் 57,200 ரூபாய்க்கும் ஒரு கிராம் ரூ 7150 -க்கும் விற்கப்பட்டது. அது போல் வெள்ளியின் விலை கிராம் ரூ 100- க்கு விற்பனை செய்யப்பட்டது.