எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள் ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சில பிரச்னைகளும் வீண் செலவுகளும் ஏற்படக்கூடும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.