
ம. அறிவுச்சுடர்
வயதில் முதியவர் அனைத்திலும் வல்லவர் கட்டட வேலை செய்பவர் கூலித் தொழிலாளி. அவருக்கு கீழே வேலை செய்பவர்களுகெல்லாம் அவர் ஒரு குருவாகவே வாழ்ந்து வந்தார். ஒரு நாள் முதியவரும் அவருடன் இருக்கும் தொழிலாளர்களும் ஒரு கட்டட வேலைக்கு சென்று இருந்தனர். அங்கு வாழ்ந்து வந்த மக்கள் பணக்கார தோற்றம் உடையவராக இருந்து வந்தனர். அவர்கள் வீட்டில் செல்லப்பிராணியாக இருந்து நாய் குட்டி கூட சொகுசு ரூம் ஃபிலாஷ்கில் பால் குடிக்கும். சவர்லதான் தினமும் குளிக்கும். இப்படிப்பட்ட உதவி செய்யும் குணம் படைத்த அதாவது நாயைக் கூட அழகாக பராமரிக்கும் குணத்தை பார்த்தால் மிருந்த நல்லவர்களாக எண்ணம் கொண்டது.
ஆனால் நாயை மதிக்கும் குடும்பத்தில் பிறந்த சிறுவன் தினேஷ் எப்படி மக்களை மதிக்க வேண்டும். எப்படி போற்றப்படவேண்டும், என்பதை பெற்றோர்கள் கற்றுக்கொடுக்கத் தவறிவிட்டனர்.
காலை 8.00 மணி சரியாக முதியவர் வேலைக்கு வந்தார். முதியவர் பெயர் சாமி. அவருக்கு தினேஷ் மரியாதை கொடுக்காமல் வேலை பார்த்து வந்த சாமி அய்யாவை போடா வாடா என்று தகாத முறையில் திட்டினான். அதை தட்டி கேட்க வந்த மற்றொரு தொழிலாளியை திடீரென அடித்து விட்டான்.
உடனே முதலாளி அதாவது தினேஷின் அப்பா பதட்டமுடன் வந்து,! என்ன செய்கிறாய் இதுதான் பெரியவர்களை நடத்தும் முறையா? உனக்கு ஒழுக்கத்தை கற்று தர மறந்துவிட்டேனே! இருந்து விட்டேனே பணத்தில் முதலாளியாக இருந்து நான் பிள்ளையை தவறான பாதையில் வளர்த்த ஒரு பாவியாக நிகழ்கின்றேனே.! என தவித்தார். உள்ளம் குமுறினார்.
உடனே. தினேஷ் படித்தவர்களுக்கு தான் முதல் மரியாதை படிக்காதவர்களுக்கு எதுக்கு மரியாதை என்று திமிருடன் சொன்னான்.
டேய் முதியவரை பற்றி உனக்கு என்ன தெரியும் 25 வருட வெளிநாட்டு அனுபவம் நமக்கு தெரியாத மொழியெல்லாம் கற்று தெரிந்த குரு படிப்பு இல்லை என்றாலும் வெளி உலகத்தை கற்று உயர்ந்தவர். இவரை பற்றி இப்படி சொல்லலாமா?
மரியாதை என்பது படிப்பில் மட்டுமில்லை மற்றவர்களின் மதிப்பில் உள்ளது.
கட்டட வேலை மட்டுமின்றி அவர் ஒரு ஆசிரியராக வாழ்ந்து வந்தவர். கற்றது கையளவு என்பதில் உறுதியாக வாழ்ந்து வந்தார்.
நாம் கொடுக்கும் காசை வைத்துதான் புத்தகம் வாங்கி அறிவை வளர்த்து கொள்ள ஓர் சிற்பியாக செதுக்கி வந்தவர்.
இதற்கும் மேல் நீ அறிவது ஒன்று இருக்கின்றது. நம்மை விட அறிவில் பெரியவர் மட்டுமின்றி பணத்திலும் பெரியவர்.
அவரிடமிருந்து அடக்கத்தை கற்றுக்கொள்.
வியப்புடன் நின்றான் தினேஷ் அப்போது தான் நீ வாழ்க்கையில் உயர முடியும். இதைப் புரிந்துகொள் என துப்பாக்கி தோட்டாபோல் வார்த்தைகளால் மகன் இதயத்தை தொட்டார்.
மகன், தந்தையே என்னை மன்னித்துக்கொள் என்றான், மனம் திருந்திய மைந்தனை மனதார வாழ்த்தினார் தந்தை.