
29.04.1945 இத்தாலி மஞ்சள் நிற வாகனம். 18 சடலங்கள் பெரும் வண்டியிலிருந்து
வீசப்பட்டன. கோர தாக்குதல்; சிதைந்த முகம்; அந்த உடல் இறைச்சி கட்டி தொங்குவதை போல் காட்சி;
இறந்து போன அந்த உடலை கண்டவுடன் விடுதலை கிடைத்தது என ஆரவாரம்;
அவர் வேறு யாரும் இல்லை; அவர் தான் வட மத்தியில் இத்தாலியின்
பிராடு பகுதியில் Alexandro _ரோசா தம்பதியினருக்கு 1883 ஜூலை 29 பிறப்பு.
அவருக்கு தன் அப்பா போல் சோசலிசம் மேல் ஆர்வம் கொண்டவர். தன்னை அம்மாவை போல் ஆசிரியர் ஆக
வடிவமைத்து கொண்டவர்; கம்யூனிஸ்ட் சித்தாந்த வாதிகளின் தொடர்பால் ஈர்க்கப்பட்டார்;
தன்னை ஓர் சோசலிஸ்ட் ஆகவே நிலை நிறுத்தி கொண்டார்; 1914 மத்தியில் பத்திரிகை தொடங்கி
சமுதாய புரட்சி ஒன்றை தன் எழுத்துக்களால் ஏற்படுத்தினார்; 1 st உலக போர் தொடங்கிய காலம்
இத்தாலி உடன் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா கைகோர்த்தது. சோசலிஸ்ட் எதிர்ப்பு,சேதம் ஏற்பட்டது.
அதனால் நடுநிலையோடு செயல் பட்டார்; 1915 ராணுவ வீரர் ஆக செயல்பட்டார்;
இத்தாலி அரசுக்கு 1917 தொடர் தோல்வி உண்டானது. போருக்கு பின் people of Italy என்ற பத்திரிக்கை மூலம்
புரட்சி ஒன்றை உருவாக்கினார்; ஒரு பக்கம் வேலை இல்லா திண்டாட்டம்; மறு பக்கம் இத்தாலி அரசால் போரை தடுக்க முடியவில்லை; போராட்டம் ஒடுக்க இத்தாலி அரசு அவரிடம் ராணுவ உதவி நாடினர்;
அவருக்கு அரசு மற்றும் தொழிலதிபர்களிடம் நல்ல எண்ணம் தோன்றியது; காலம் செல்ல செல்ல
இளைஞர் பட்டாளம் அவர் பின் வர தொடங்கின; ஓர் அமைப்பு அவரை பின் தொடர்ந்தது;
அது தான் பாசிசம் என்ற புரட்சி இயக்கம். அவ்வமைப்பின் படை ரோம் நோக்கி நகர்ந்தது .
காரணம் புதிய அரசாங்கத்தை தானே உருவாக்கி கொள்வோம் என்று. தொடர் போராட்டம்.
எழுச்சி முதிர்ச்சி அடைந்து விட்டது. அடக்க முடியாத கர்ஜிக்கும் சிங்கமாக
குரலை எழுப்பினார்கள் அந்த கூட்டம். மேல் அதிகாரிகள் அஞ்சி நடுங்கினர்;
அதிகாரத்தை அடக்கும் மதம் பிடித்த யானை போல் திகழ்ந்தனர்; அந்த கூட்டம் பட்டத்து யானையை
அடக்கும் காட்டு யானை போல் திகழ்ந்தனர் அவர்கள்; இறுதியில் சாவவுடம்பை பெற்று
வெற்றி பெற்றனர்; 1922 October 31 பிரதமர் பதவி அவரின் வீட்டு கதவை தட்டியது;
சர்வாதிகாரி முளைத்துவிட்டான்; கொலை நாடு கடத்தல் மக்களுக்கானாரசு என்று இல்லாமல்
அரசுக்கான மக்கள் என்ற நிலை கம்யூனிஸ்ட் கைது எதிர் கட்சி ஒடுக்கம் 10000 தலை துண்டிப்பு
என தனது அடக்கு முறைக்கான சொந்தக்காரன் என்ற முறையில் திகழ்ந்தார்; ஜெர்மனி நாட்டிற்கு
ஹிட்லர் எப்படியோ அது போல இத்தாலி நாட்டிற்கு சொந்தகாரர். அவர் தான் “பெனிடோ முசோலினி”
தனது இறப்பு நாடே கொண்டாடினாலும் தனது பேச்சாற்றலால் எழுத்தற்றலால் மக்கள் மனதை வென்றவன்
சர்வாதிகாரி பெனிடோ முசோலினி.