புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.