நடிகர் விஜய் ஆண்டனியின் 12வது படமான ‘மார்கன்’ டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து, இசையமைத்துள்ளார். வித்தியாசமான க்ரைம் திரில்லர் பாணியில் படம் உருவாகி உள்ளது. அட்டக்கத்தி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்துபோகும் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் எடிட்டரான லியோ ஜான் பால் இயக்கும் இந்தப் படம் பான் இந்திய திரைப்படமாக உருவாகிறது.
பிரிகடா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும், விஜய் ஆண்டனி சகோதரியின் மகன் அஜய் திஷன் வில்லனாகவும் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 27 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.