தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

December 16, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

December 16, 2025

தமிழ் செய்தி இணையதளம்

ஹாலிவுட் இயக்குநர் ‘டேவிட் லிஞ்ச்’ காலமானார்!

ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட 3 திரைப்படங்கள், சிலப் படங்களின் குணச்சித்திர நடிகர், சிலப் படங்களின் இசையமைப்பாளர் எனப் பல்வேறு திறமைகளுடன் வலம் வந்த இயக்குநர் டேவிட் லிஞ்ச், பல ஆண்டுகளாக புகைபிடித்தலால் ஏற்படும் நுரையீரல் நோயான எம்பைசிமாவுடன் போராடி வந்தார். தொடர்ந்து சுவாசிக்க ஆக்ஸிஜன் வைக்க வேண்டிய சூழலில் சிகிச்சைப் பெற்றுவந்த இவர், தன் 78-வது வயதில் மரணமடைந்தார்.

1946 இல் மொன்டானாவில் பிறந்த லிஞ்ச், திரைப்பட இயக்குநராக மாறுவதற்கு முன்பு ஒரு ஓவியராக தனது கலைப் பயணத்தைத் தொடங்கினார். அவரது முதல் படமான “எரேசர்ஹெட்” (1977), ஹாலிவுட் சுயாதீன சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. The Elephant Man (1980) மற்றும் வழக்கமான கதை சொல்லலை புறக்கணித்து அவர் இயக்கிய “ப்ளூ வெல்வெட்” (1986), “வைல்ட் அட் ஹார்ட்” (1990) மற்றும் “மல்ஹோலண்ட் டிரைவ்” (2001) உள்ளிட்ட திரைப்படங்கள் கவனம் பெற்றன.

1990 களில் “ட்வின் பீக்ஸ்” மூலம் தொலைக்காட்சியில் லிஞ்சின் பிரவேசம் நிகழ்ந்தது. இதில், The Elephant Man (1980), Blue Velvet (1986), Mulholland Drive (2001) ஆகியப் படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டன. 1990-ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் Wild at Heart படத்திற்காக, மதிப்புமிக்க பாம் டி’ஓர் (Palme d’Or) விருதை வென்றார்.

இவரின் Twin Peak படைப்பு உலகளவில் கவனம் பெற்றது. இதன் இரண்டாம் பாகம், 2017-ல் Twin Peaks: The Return தான் இவரின் கடைசித் திரைப் படைப்பாகும். இவரை கௌரவிக்கும் வகையில், 2020-ம் ஆண்டு ஆஸ்கார், இவருக்கு கௌரவ அகாடமி விருது வழங்கியது. இவரின் மரணத்துக்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Twin Peaks படத்தின் நட்சத்திரமான நிக்கோலஸ் கேஜ், “நான் சினிமாவை காதலிக்க முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர்” என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top