உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது
உலக சுகாதார மையத்திலிருந்து (WHO) அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவை அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். நேற்று அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற டிரம்ப், தனது முதலாவது உத்தியோகபூர்வ நடவடிக்கையாக இதனை அறிவித்துள்ளார்.
விழாவில், அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ் ஜூனியர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். துணை அதிபர் வான்ஸ் இதற்கு முன் பதவியேற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர்கள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தியாவினால் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
அதிபர் டிரம்ப் தனது அடுத்த நான்கு ஆண்டுக்கான பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை மீண்டும் விலக்கி, ஆண் மற்றும் பெண் பாலினங்களுக்கே சட்ட அங்கீகாரம் அளிக்கப்படும் என்றும் சட்டவிரோத குடியேறிகள் தடுக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
அதேபோல், உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கிய பெரும் நிதி ஆதரவைப் பயன்படுத்தி, கொரோனா பெருந்தொற்றை சரியாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டி, அந்த அமைப்பிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.