மணி 7:25 புரட்சியின் ஓசை லட்சிய குரலின் ஓசை மக்கள் செல்வாக்கு கொண்டவரின் ஓசை இளம் வயதில் நாட்டுக்காக உயிர் நீத்தவரின் ஓசை ஓர் போராளியின் ஓசை விடுதலையின் கர்ஜனை கொண்ட ஓசை ஜனநாயகவாதியின் ஓசை ஆங்கிலேயர்களின் அடக்கு முறைக்கு குரல் கொடுத்த ஓசை வீரியமிக்க சிந்தனை கொண்டவரின் ஓசை சோதனைகளை சந்தித்தவரின் ஓசை தன் தாய் தந்தைக்கு பெருமை சேர்த்தவர் ஓசை தியாக செம்மலுக்கு எடுத்து காட்டின் ஓசை மரணத்தை விரும்பியவர் ஓசை கடைசி ஓசைஅதுவே இன்குலாப் ஜிந்தாபாத்’ தூக்கு மேடை பலகை விலகியது;
தூக்கு கயிறு இறுகியது. மரணத்தை தன் நாட்டுக்காக நாட்டின் பற்றுக்காக தியாகத்தை மேற்கொண்டார்
அவரே “பகத்சிங்”..
1907ஆண்டு செப்டம்பர் 27 இளம் வயது பகத்சிங், பங்கா என்ற குட்டி கிராமம். மாநிலம் பஞ்சாப்.
அப்பா ஒரு சிறை தண்டனை பெறுவதில் பெருமை கொள்பவர்; அப்பா கிஷன் சிங்.
சிறை வாசம் பெற்று வீடு திரும்பிய அப்பாவிற்கு ஒரு நற்செய்தி. மகன் பிறந்து இருக்கின்றான்.
செய்தி குடும்பமே குதுகளத்தில் மகிழ்ச்சி பொங்கிட எனக்கு ஒரு போராளி பிறந்துவிட்டான் என்று மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் தன்னை மறந்தார். பகத்திற்கு நினைவு வர தொடங்கின.
பகத் கண்களில் ஓர் ஆச்சரியம் நிகழ்ந்து கொண்டே இருந்தது.
“நம் மக்கள் ஏன் அச்சத்தில் ஓடி ஒளிகின்றனர்,” ஆங்கிலேயர்கள் ஒழிக”
என்ற கோஷம் மட்டும் பகத் செவியில் ஒலித்துக்கொண்டே இருந்தது. தன் அப்பாவிடம்
சென்று “நாம் ஏன் அடிமை படுத்தப்படுகிறோம்.? என்று கேட்டார். சுதந்திரம் என்றால்
என்ன? என்று வினவினான். அவன் ஆக்ரோஷத்தை கேட்ட கிஷன் சிங் தன் மகனின் ஆர்வத்தை புரிந்த அவர் சமூக அக்கறையோடு தன் மகனிடம் நாட்டின் பற்றை எடுத்து கூறினார்.
கதைகளை கேட்க கேட்க ரத்தம் கொதித்தது பகத்திற்கு. ஒன்பதாம் வகுப்பு மாணவன்;
அவனுக்குள் ஓர் எழுச்சி உண்டானது; சுதந்திரம் பெற்றே தீர வேண்டும்;
பிரிட்டன் அரசாங்கதை ஒடுக்க வேண்டும் என்று தனக்குள்ளே ஓர் லட்சியத்தை மேற்கொண்டார்.
காங்கிரஸ்காரர்கள் இளைஞர்களை திரட்ட அதில் பங்கேற்க பகத்திற்கு ஆர்வம் வர தந்தையின் அனுமதியோடு “பூட்டிய இருப்பு கூட்டின் கதவு திறக்கபட்டது , சிறுத்தையை வெளியில் வா”
என்ற வரிகளுக்கு ஏற்ப கூடாரத்தின் வெளியே பாயும் புலியாக சீரும் சிறுத்தையாக
கர்ஜிக்கும் சிங்கமாக வந்தான் அந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன்.
ஒரு பக்கம் அகிம்சை வழியில் காந்தி ஒத்துழையாமை இயக்கம் இயக்கி வந்தார்.
காந்தியின் பேச்சாற்றல் அனைத்து மக்களையும் ஈர்க்கும் விதமாக இருந்தது.
மறு பக்கம் கிளபத் இயக்கம். இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.
இரு இயக்கமும் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டது. பிரிட்டன் அரசாங்கதை பணிய வைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். புரட்சி வெடித்தன; சிறை நிரப்பும் போராட்டம் மக்களால்
மாணவர்களால் பிஞ்சுகளால் நிரம்பி வழிந்தன. ஊர்கள் கலவர பூமி ஆனது. பகத் சட்டை பாக்கெட் அனைத்தும் கிழிந்து தொங்கும். காரணம் புத்தகம். பெரிய பெரிய புத்தகத்தை நூல்களில் படித்து அறிவை பெருக்கி கொள்வார்.; சிறு நூல்களாக இருந்தால் புத்தகங்களின் அடைக்கலமாக அவன் பாக்கெட் குள்ளே ஒலிந்துகொள்ளும். கார்ல் மார்க்ஸ்,லெனின் போன்றோரின் வரலாறு
அவனை புரட்சி செய்ய வழி வகுத்தது.
வீட்டை விட்டு வெளியே செல்ல கடிதம் ஒன்றை எழுதிவிட்டு நாட்டு மக்களை காக்க
பொது வாழ்க்கைக்கு அடி எடுத்து வைத்தார். கான்பூர், புரட்சி பகத் வாழ்க்கையில் தொடங்கிய இடம்.புரட்சி தோழர்கள் அறிமுகம் அவனுக்கு கிடைத்தது. அதில் முக்கிய புள்ளியாக சந்திரசேகர ஆசாத் திகழ்ந்தார். அகிம்சை வழியில் வாழ்ந்து வந்த பகத்திற்கு ஆச்சரியமாக இருந்தது புரட்சி கரவர்களின் வாழ்க்கையை பார்க்கும் போது. ஆசாத் தலை மறைவதில் கெட்டிக்காரர்.மாணவர்கள் மத்தியில் பேச்சாற்றலுக்கு உயிர் கொடுத்து தன்னை சமுதாயத்தில் ஒரு ஆளாக வளம் வர தொடங்கினான் அவன்.இந்தியாவின் விடுதலைக்காக தொடங்கப்பட்டது தான் புரட்சிகர இயக்கம். இந்துஸ்தான் republic association அமைப்பு.
ரஷ்யா புரட்சி அந்த புரட்சியின் தொடக்கமே அமைப்பின் காரணமாக திகழ்ந்தது. உறுப்பினராக சேர்ந்தார்.உழைப்பவர்களுக்கு வறுமையே பரிசாக கிடைத்தது; பணக்காரனுக்கு பரிசாக சொகுசு வாழ்க்கை கிடைத்தது. இந்த முறையை மாற்ற வேண்டும் என்பதை கனவாக லட்சியமாக எடுத்து கொண்டார் தன் வாழ்வில். கிராம் கிராமமாக சென்றார் ; இளைஞர் படையை உருவாக்கினார்.
ஆயுத புரட்சிக்கு ஆட்களை சேர்த்தார். காகோரி ரயில் கொள்ளை வழக்கு. பொய் குற்றச்சாடு பாய்ந்தது அவன் மேல். விடுதலை வேட்கை; கீர்த்தி என்ற இதழ், அதில்பாபர் அகாலி பற்றி கட்டுரை. புரட்சி வெடித்தது;
மார்ச்சு -15 -1926 கட்டுரை வெளியான நாள். மக்களுக்கு அறிமுகம் கிடைத்தது.
ஆயுதப் புரட்சி பற்றி. கட்டுரை போல மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான்
1926 நவஜாவான் பாரத் சபா அமைப்பு பகத் சிங் குரல் ஓங்கியது.
Simon commission திரும்பி போ !!!
காலனியாதிக்கம் ஒழியட்டும்!!!!
சாண்டர்ஸ் என்ற காவல் துறை போராட்டத்தை கலைக்க தடியடி நடத்தினார்.
அதில் லாலாஜி வீர மரணம் அடைந்தார். ஆயுத புரட்சிக்கு விதிட்டவர்கள் இரண்டு பேர்.
ஒருவர் பகத் இன்னொருவர் ராஜகுரு தன் துப்பாக்கி தோட்டாக்கள் மூலம் சாண்டர்ஸ் மரணத்திற்கு ஆளானார். குண்டு வீச கூட தயார் ஆனவர்கள் என்று சொல்வதை விட சலிக்காதவர்கள் அல்ல,
ஏப்ரல் 8 1928 நாடாளும் மன்றம் களைகட்ட தொடங்கியது. குண்டை ஆள் இல்லா பக்கம் வீசினார் பகத். புகை அடங்க தொடங்கின; பகத் மற்றும் ததாகியோர்
“தொழிலாளர்கள்வர்க்கம் வாழ்க!!!
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக, புரட்சி ஓங்குக!”
லாகூர் வெடிகுண்டு வழக்கு,சகாரன்பூர் வெடிகுண்டு வழக்கு என பல வழக்குகளில் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். குண்டு போட்ட வழக்கில் சிறையில் இருக்கும் போது “எங்களை தீர்த்து கட்டுவதன் மூலம் இந்த தேசத்தை அழித்து விட முடியாது, மீறினால் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்
எங்கள் தோழர்கள்” பேசிய பேச்சுக்கு கிடைத்த பரிசு தான் April 19 1929 ஆயுள் தண்டனை.
மியான் வலி சிறை பகத் வாழ்வில் மறக்க முடியாத சிறை ஆகும்.
சிறை வாசத்தில் உணவின் வாசம் இல்லாமல் வெளிறிய உடம்பு,சோகை படிந்த கண்கள்,
அவருடைய பேச்சு அவரை தோற்கடிக்க செய்தது. காரணம் உடம்பில் தெம்பு இல்லாத காரணத்தினால். லாகூர் சதி வழக்கு ஜூலை 10,1929
பகத் ஆஜராக வருவதை பார்க்க அனைத்து தோழர்களும் காத்திருந்தனர். ஜூலை 13 வேறு சிறை
உண்ணாவிரதம்!!! உண்ணாவிரதம்!!!லாகூர் வழக்கில் தூக்கு தண்டனை
பெற போகும் தன மகனை காப்பாற்றஎதிர்வாதம் செய்தார்.ஆனால் மரணத்தை
வேண்டும் என்று முடிவு செய்து தன் ஆசை நிறைவேறியது.தன் வாழ்வு குறுகிய காலம் ஆக இருந்தாலும்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்வதில் பெருமிதம் அடைகிறேன்”துப்பாக்கி தோட்டாக்கள் மட்டுமே அவர் வாழ்க்கை அல்ல; பல இளைஞர்கள் உருவாக்கியதில் பெருமை அடைகிறேன். என்று 1931 ஆண்டுஇயற்கையோடு தன்னை அர்ப்பணித்து கொண்டு சென்றார்
சுதந்திர தினம் அன்று சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கொண்ட பகத் சிங் வீர வரலாறை தெரிவப்பதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்வோம்.
இளம் போராளி பகத் சிங்
ம.அறிவுச்சுடர்