திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் முயற்சிக்கும் அதிமுக, பாஜகவை கண்டித்தும்”
ஜனவரி 7 அன்று காலை 10 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆளுநர் ஆர். என். ரவியை பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி, குடியரசுத் தலைவருக்கு மனு அளிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்காக, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர். பாலு, எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Leave a Reply