தி செம்மொழி

தமிழ் செய்தி இணையதளம்

December 17, 2025

No# 1 தமிழ்நாடு செய்தி இணையதளம்

December 17, 2025

தமிழ் செய்தி இணையதளம்

விதைகளில் இருந்து வெளிவந்த முதல் ‘இலைகள்’ – விண்வெளியில் சாதனை படைத்த இஸ்ரோ !

பி.எஸ்.எல்.வி.- சி 60 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகளில் இருந்து முதல் ‘இலைகள்’ வெளிவந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

 

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து கடந்த டிச.30ம் தேதி பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. தற்போது பூமியில் இருந்து 500 கி.மீ., உயரத்தில் உள்ள வட்டப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் சுற்றி வருகின்றன

இந்த நிலையில் பி.எஸ்.எல்.வி., சி60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட CROPS கருவியில் காராமணி எனப்படும் தட்டைப்பயிரின் எட்டு விதைகள் வைத்து அனுப்பப்பட்டன.

விண்வெளியில் தாவரம் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய அனுப்பப்பட்ட CROPS கருவியில் வைக்கப்பட்ட காராமணி பயறு விதைகள் முளை விட தொடங்கியது. இந்நிலையில், இன்று (ஜன.06) விண்வெளியில் காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இதன் புகைப்படத்தை வெளியிட்டு இஸ்ரோ கூறியிருப்பதாவது: “பி.எஸ்.எல்.வி.- சி 60 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆராய்ச்சிக்கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றி அடைந்தது.

காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி உயிரியல் ஆராய்ச்சியில் இந்த சாதனை மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது”. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top