HMPV வகை புதிய தொற்று தமிழகத்தில் இல்லை என மருத்துவத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சீனாவில் பரவிவரும் HMPV என்ற புதிய வைரஸ் தொற்று சென்னை சேத்துப்பட்டு மற்றும் கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 2 குழந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று எதுவும் இல்லை என தமிழ்நாடு மருத்துவ துறை விளக்கம் அளித்துள்ளது.